1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (17:50 IST)

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு: கால அட்டவணை வெளியீடு

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு: கால அட்டவணை வெளியீடு
முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தேர்வு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு பிப்ரவரி 12-ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்த தேர்வுகள் இருவேளைகளிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழ், வணிகவியல், சமூக அறிவியல், இயற்பியல், வேதியியல், சமூக அறிவியல், வரலாறு, பொருளாதாரம் உள்பட ஒருசில பாடங்களுக்கான தேர்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு அட்டவணை தெரிவித்துள்ளது
 
மேலும் இந்த தேர்வு குறித்த முழு விவரங்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.