தொடர்புடைய செய்திகள்
- பொறியியல் படிப்பு: கலந்தாய்வு குழுவின் முக்கிய அறிவிப்பு
- “துணிவு படத்தில் பாடல் எழுதியுள்ளேன்…” பிரபல பாடல் ஆசிரியர் வெளியிட்ட தகவல்!
- ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் ஒத்திவைப்பு: ரிசர்வ் வங்கி தகவல்!
- இந்தியா-நியூசிலாந்து போட்டி: மழையால் டாஸ் போடுவது ஒத்திவைப்பு!
- அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: புதிய தேர்வு தேதி என்ன?
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு
28.11.2022 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு (BT Deployment Counselling) மட்டும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கலந்தாய்வு டிசம்பர் 9ம் தேதி அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2022-20-23 கல்வியாண்டிற்காண. 01.08,2022 நிலவரப்படி முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு,
அதனடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட முதுகலை /பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் வருகின்ற 28.11.2022 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 29.11.2022 முதுகலை ஆசியர்களுக்கும் இணையதள வாயிலாக பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 28.11.2022 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு மட்டும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த கலந்தாவு 09.11.2022ம் தேதி அன்றுநடைபெறும்.
'மேலும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கஷந்தாய்வு திட்டமிட்டபடி 29.11.2022 அன்று நடைபெறும் என்பதையும் அணைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
