“துணிவு படத்தில் பாடல் எழுதியுள்ளேன்…” பிரபல பாடல் ஆசிரியர் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் துணிவு படத்தின் பாடல்கள் வெளியீடு பற்றிய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
அஜித் நடித்த துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஆகிய இரண்டும் பொங்கல் திருநாளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீடு பற்றியும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஜிப்ரான் இசையில் படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் பட்டத்து அரசன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாடல் ஆசிரியர் விவேகா “துணிவு படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளேன்” என்ற அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே துணிவு படத்தில் வைசாக் ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.