வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (12:16 IST)

அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: புதிய தேர்வு தேதி என்ன?

Annamalai University
கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும் புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்துக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே இன்று பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும் புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran