செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (17:34 IST)

ஓடும் ஆட்டோவில் பெண்ணிடம் நகை கொள்ளை: சென்னையில் பெண் உள்பட இருவர் கைது

சென்னை பல்லாவரத்தில் ஓடும் ஷேர் ஆட்டோவில் பெண் ஒருவரிடம் இருவர் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
சென்னை பல்லாவரத்தில் ஷேர் ஆட்டோவில் சரஸ்வதி என்ற ஆசிரியை பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் பயணம் செய்த பெண் உள்பட இருவர் திடீரென அந்த ஷேர் ஆட்டோவில் இருந்த ஆசிரியரின் நகையை பறித்து விட்டு அவரை ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டனர் 
 
ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த ஆசிரியை சரஸ்வதி படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் ஷேர் ஆட்டோவை விரட்டிச் சென்று பிடித்து அதில் இருந்த கொள்ளையர்களை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர் 
 
காவல்துறையினரின் விசாரணையில் ஆசிரியை சரஸ்வதி அவர்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் பிரசாந்த் மற்றும் ரோஸ்மேரி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
 
சென்னையில் பட்டப்பகலில் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த ஆசிரியை ஒருவரிடம் நகை கொள்ளை அடித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது