வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (16:06 IST)

இன்னும் 10% தான் பாக்கி.. கொரோனாவுக்கு முடிவு எழுதும் தமிழகம்!!

தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்தது என தகவல். 

 
தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்தே அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக சென்னை இருந்தது. அதற்கு காரணம் அங்கு மக்கள் தொகை அடர்த்தி தான் என சொல்லப்பட்டது. அதனால் அங்கு கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் அதன் பயனாக இப்போது சென்னையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,000 க்குக் கீழ் வந்துள்ளது. 
 
அதோடு, தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.