திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (16:45 IST)

பிரியாணி வாங்கிக் கொடுத்து 9 ஆம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய உறவினர்… அதிரவைக்கும் செய்தி!

சென்னை புளியந்தோப்பில் மாணவி ஒருவருக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்து அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் கேண்டீன் ஊழியர் ஒருவர்.

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த அந்த பெண்ணின் கணவர் தனியார் மருத்துவமனையில் டிரைவராக உள்ளார். அந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் பெண்ணின் வயிறு வழக்கத்துக்கு மாறாக பெரிதாக இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி மாணவியிடம் விசாரித்த போது மாணவியின் உறவினரான மணி என்கிற மோகன்ராஜ்தான் கர்ப்பத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த தனக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்த மணி அதன் பிறகு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் மோகன்ராஜ் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.