ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (17:04 IST)

மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்… இதுவரை நடந்த மோதல்கள் – யார் கெத்து!

ஐபிஎல் தொடரின் இரு ஜாம்பவான் அணிகளும் நாளை மோதிக் கொள்ள உள்ள நிலையில் இதுவரை அந்த அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டிகளைப் பற்றிய ஒரு பார்வை.

கொரோனாவுக்குப் பிந்தையை மிகப்பெரிய கிரிக்கெட் சுற்றுலாவாக ஐபிஎல் நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டியாக கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்த வரை சென்னை மும்பை போட்டிகள் என்றால் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு நிகரானது.

இதுவரை நடந்த 12 சீசன்களிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் 30 முறை மோதியுள்ளன. மும்பை 18 முறையும், சென்னை அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இறுதிப் போட்டியில் மூன்று முறை மோதியுள்ளன. அதில் ஒரு முறை சென்னை அணியும் , 2 முறையும் மும்பை அணியும் வென்றுள்ளன. கோப்பையை பொறுத்தவரை மும்பை 4 முறையும் சென்னை அணி 3 முறையும் வென்றுள்ளன.

இப்படி எல்லா வகையிலும் மும்பை அணி முன்னணியில் திகழ்கிறது.