தேர்தல் பணிகள் முடிந்து திரும்பிய ஆசிரியை – எதிர்பாராத முடிவு !
உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு வந்துவிட்டு இரவில் வீடு திரும்பிய ஆசிரியை ஒருவர் விபத்தில் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமாரம்பட்டியில் ஆசிரியையாக இருப்பவர்கமலி என்ற ஆசிரியை. இவர் தண்டோரம்பட்டி உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டு இருந்தார். தேர்தல் பணிகள் முடிந்த பின்னர் அவர் தன் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்ல, அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் வாகனம் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அவருக்கு தலையில் அடிபட அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார் அவர் கணவர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, அங்கிருந்து திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து பாண்டிச்சேரிக்கும், சென்னைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவ்வளவு தூரம் வந்தும் தனது மனைவியைக் காப்பாற்ற முடியவில்லையே என கமலியின் கணவர் அவரது உடலை கட்டிப்பிடித்து அழுதது காண்போரை கலங்க வைத்தது.