1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (18:41 IST)

6 உயிர்களை காவு வாங்கிய டெல்லி பனி மூட்டம்

டெல்லியில் அதீத பனிப் பொழிவாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லி கடுமையான பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. அதீத பனிப்பொழிவால் முற்பகல் வரையிலும் அதிகாலை நேரம் போல சூரிய ஒளியின்றி நகரம் காணப்பட்டுள்ளது.
 
பனிப்பொழிவின் தாக்கத்தால் 50 மீ குறைவான வெளிச்சமே தென்படுவதால் டெல்லி - நொய்டா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் டெல்லியின் புறநகர் பகுதியான கிரேட்டர் நொய்டாவில் போதிய வெளிச்சம் இல்லாததால் நேர்ந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். இந்த செய்து அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
பனிப்பொழிவு காரணமாக 500 விமானங்கள் தாமதமாகியுள்ளன. 5 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சில விமானங்கள் பக்கத்து நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.