புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 ஏப்ரல் 2021 (14:20 IST)

ஊர் முழுக்க கட்டுப்பாடுகள், டாஸ்மாக்கில் இல்லை! – மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் முக்கிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்குள் நுழைய இ-பாஸ், ஹோட்டல், திரையரங்குகளில் 50 சதவீத அனுமதி என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் இயங்கும் நேரம் மற்றும் வழிமுறைகள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் டாஸ்மாக் கடைகள் தற்போதுள்ள வழிமுறைகளை பின்பற்றியே இயங்கும் என கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாதது ம்துப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.