என்னடா ஒன்னுமே இல்ல.. திருட பொருள் கிடைக்காததால் திருடர்கள் செய்த காரியம்!

theft
Prasanth Karthick| Last Modified வியாழன், 8 ஏப்ரல் 2021 (13:16 IST)
தூத்துக்குடியில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல் திருட நகைகள் இல்லாததால் ஹோம் தியேட்டரை திருடி சென்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் வாக்களிப்பதற்காக குடும்பத்துடன் கடந்த 24ம் தேதி கோயம்புத்தூர் சென்றுள்ளார்.

திரும்ப வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது அனைத்து பொருட்களும் கலைந்து கிடந்துள்ளன. இதன்மூலம் தனது வீட்டில் திருட்டு முயற்சி நடந்ததை அறிந்த பாலமுருகன் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பாலமுருகன் தனது பணம், நகை உள்ளிட்டவற்றை வங்கி லாக்கரில் வைத்துள்ளதால் வீட்டில் திருட எதுவுமில்லாததால் ஏமாற்றம் அடைந்த திருடர்கள் வீட்டில் இருந்த ஹோம் தியேட்டரை திருடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :