நாளை பெரிய படங்கள் ரிலீஸ்; கொரோனா கட்டுப்பாடு – தியேட்டர்கள் அதிர்ச்சி

Prasanth Karthick| Last Modified வியாழன், 8 ஏப்ரல் 2021 (13:52 IST)
நாளை கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் திரையரங்குகளுக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது 100 சதவீத இருக்கை அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் முன்னதாகவே பலரும் 100% முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் திரையரங்குகளில் 50% மட்டுமே பார்வையாளர்கள் அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களில் பாதிபேருக்கு டிக்கெட் கட்டணத்தை திரும்ப தர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் 50% இருக்கையோடு மீண்டும் திரையரங்குகள் செயல்பட்டால் அது நஷ்டத்தை ஏற்படுத்தும் என திரையரங்க உரிமையாளர்களும் வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :