செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (10:15 IST)

நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விடுமுறை!

வரும் 14 ஆம் தேதி (நாளை) தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

 
ஆம், அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற மதுபான கூடங்கள், கிளப்புகளை சார்ந்த பார்கள், ஹோட்டல்களை சார்ந்த பார்கள் அனைத்தும் வரும் 14 ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
இதனை மீறி தமிழகத்தில் மதுபானம் விற்பனை நடந்தால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.