1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tasmac manager knife attack by known persons

ரூ.10 ஆயிரம் நன்கொடை தராத டாஸ்மாக் ஊழியருக்கு கத்திக்குத்தி: திருவாரூரில் பரபரப்பு

knife
திருவாரூரில் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை தராத டாஸ்மாக் ஊழியரை மர்ம கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருவாரூர் அருகே கோவில் விழாவுக்கு நன்கொடை தர வேண்டும் என்று கூறி டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளரிடம் ஒரு கும்பல் சண்டை போட்டு உள்ளது. நன்கொடை தர முடியாது என்று கூறிய டாஸ்மாக் மேற்பார்வையாளரை அந்த கும்பல் கத்தியால் குத்தியதாக தெரிகிறது
 
இதனை அடுத்து இரத்த வெள்ளத்தில் மிதந்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் 6 பேரை தேடி வருவதாக கூறப்படுகிறது
 
ரூபாய் பத்தாயிரம் நன்கொடை கேட்டதற்கு தர மறுத்ததால் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
About Writer
siva