தொடர்புடைய செய்திகள்
- டாஸ்மாக் மதுபான கடையில் பட்டாகத்தியை காட்டி கொள்ளை - சி.சி.டி.வி. காட்சி!
- நீட், டாஸ்மாக் எதிராக போராடிய வழக்குகளும் வாபஸ்! – தமிழக அரசு அறிவிப்பு!
- மதுரையில் பிளஸ் 2 மாணவர் திடீர் தற்கொலை: என்ன காரணம்?
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: ரூ.10 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி
- கொரோனா கம்மல் - வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள்!!
கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர் சஸ்பெண்ட்!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் எல்லைக்கு உட்பட்ட திருவரங்கம் டாஸ்மாக் மதுபானக் கடையில் பணியாற்றும் சோலைராஜ் மற்றும் ஜி ராமகிருஷ்ணன் ஆகியோர் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றுள்ளனர். இது சம்மந்தமாக மது வாங்கிய வாடிக்கையாளர் அரசாங்கம் கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என கூறியிருப்பதை சுட்டிக்காட்டு கேள்வி எழுப்ப மரியாதைக் குறைவாக பேசி கூடுதல் விலைக்கு தான் விற்பேன் எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
அதையடுத்து ராமநாதபுர மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கிட்டத்தட்ட எல்லா டாஸ்மாக் கடைகளிலும் இதுபோல அதிக விலைக்கும் பில் இல்லாமலும்தான் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
