புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (13:41 IST)

நீட், டாஸ்மாக் எதிராக போராடிய வழக்குகளும் வாபஸ்! – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் நீட் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் ஸ்டெர்லைட், எட்டுவழிசாலை, மீத்தேன் உள்ளிட்ட பலவற்றிற்கு எதிராக போராடியவர்கள் மீது தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் முன்னதாக திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில் தற்போது நீட் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளும் திரும்ப பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான 446 வழக்குகளும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீதான 422 வழக்குகளும் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.