வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 மே 2023 (19:15 IST)

ரூ.2000 நோட்டை வங்கியில் மாற்றுவதில் புதிய நிபந்தனை... காலக்கெடுவும் அறிவிப்பு..!

2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி சற்றுமுன் அறிவித்த நிலையில் 2000 ரூபாய் நோட்டை வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்ததாக வெளிவந்த செய்தியை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டை வங்கியில் மாற்றுவதிலும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிபந்தனையின் படி ஒருவர் ஒருமுறை ரூ. 20,000 மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே ஒரு முறை ஒருவர் பத்து 2000 ரூபாய் நோட்டை மட்டுமே வங்கியில் மாற்றிக் கொள்ள முடியும். 
 
அது மட்டுமின்றி புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிபந்தனைகளும் முறையாக பின்பற்ற வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran