வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 20 மே 2023 (12:15 IST)

ரூ.2000 நோட்டை பயன்படுத்தி வங்கிக்கடனை அடைக்கலாமா? பிக்சட் டெபாசிட் செய்யலாமா?

2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக நேற்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்த நிலையில் அந்த நோட்டை மாற்றுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பதிவாகின.
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு எந்த விதமான கட்டுப்பாடும் இல்லை என்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர் அவற்றை தங்களது வங்கி கணக்கில் செலுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பர் தங்களது சேமிப்பு கணக்கு மட்டுமின்றி வங்கி கடனை திரும்ப செலுத்துவதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும்,  அதேபோல் 2000 ரூபாய் நோட்டை வைத்திருப்போர் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு எந்த விதமான கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 
 
எனவே 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் கருப்பு பணமாக இல்லாமல் இருந்தால் தாராளமாக எந்த வழியில் வேண்டுமானாலும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran