1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tasmac alcohol rate chances to hiked

மீண்டும் உயர்கிறதா டாஸ்மாக் மதுபான விலை? குடிமகன்கள் அதிர்ச்சி..!

மதுபானங்கள்
டாஸ்மாக் மதுபான விலை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  
 
தற்போது டாஸ்மாக் கடைகளில் சாதாரண மதுராக பாட்டில்கள் 140 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் இந்த பாட்டில்களின் விலை  உயரலாம் என்று கூறப்படுகிறது. 
 
மது உற்பத்தி மூலப்பொருள்கள் விலை உயர்ந்துள்ளதாகவும் அதன் காரணமாக மது உற்பத்தி ஆலைகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
சாதாரண நடுத்தர மற்றும் உயர்தர மதுபானங்களின் உற்பத்தி செய்வதில்  மூலப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் மதுபான விலை  விரைவில் உயர்த்தப்படும் என்றும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  
 
இதனை அடுத்து டாஸ்மார்க் மதுபானங்களின் விலை குவாட்டருக்கு குறைந்த பட்சம் பத்து ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!