வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2023 (16:00 IST)

ஒரே குடும்பத்தில் நால்வர் கொலை எதிரொலி: பல்லடத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூர் அல்ல அருகே பல்லடம் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்லடம் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.  பல்லடம் பகுதியில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் அந்த பகுதியில் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பதாகவும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva