வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:12 IST)

ஆவின் நெய், வெண்ணெய் இன்று முதல் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திமுக ஆட்சி தொடங்கியதில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பொருள்கள் விலை உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. 
 
இந்த நிலையில் இன்று முதல் ஆவின் மற்றும் வெண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொது மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
நெய்யின் விலை ஒரு ரூபாய் முதல்  350 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும், அதே போல் வெண்ணெய் விலை ஐந்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
நெய் மற்றும் வெண்ணெய் புதிய விலை பட்டியலை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அதை பார்த்து பொதுமக்கள் அதிருப்திஅடைந்துள்ளனர். நெய் மற்றும் எண்ணெய் விலையை மீண்டும் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.