திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (19:15 IST)

வாய்க்காலில் கவிழ்ந்த டேங்கர் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்

நாகையில் கச்சா எண்ணெயை ஏற்றி கொண்டு வந்த டேங்கர் லாரி, வாய்க்காலில் கவிழ்ந்தது.

திருவாரூர் மாவட்டம் களப்பாலில் இருந்து டேங்கர் லாரியில் 25 ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது கருவேலங்கடை என்ற இடத்தில் நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த வாய்க்காலில் விழுந்து கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த கச்சா எண்ணெய் முழுவதும் வெளியேறி வயல்களில் கொட்டியது. இது பற்றி தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிரேன் மூலம் டேங்கர் லாரியை மீட்டனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.