1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (12:11 IST)

ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! – தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் செயல்படும் அரசின் ரேசன் கடைகள் செயல்படும் நேரங்கள் மாற்றப்பட்டு புதிய நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநில அரசின் விலையில்லா அரிசி மற்றும் இதர உணவு பொருட்கள் மாதம்தோறும் ரேசன் கடைகள் வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது ரேசன் கடைகள் செயல்படும் நேரத்தை தமிழக அரசு மாற்றியுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரேசன் கடைகள் காலை 8.30 முதல் முற்பகல் 12.30 வரையிலும், பின்னர் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்படும்.

இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.