முதல்வராக முதல் பிறந்தநாள்..! – அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை!
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று அவர் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தியுள்ளார்.
திமுக தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மாவட்ட திமுகவினர் ரத்த தான முகாம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளில் காலையிலேயே மெரினா கடற்கரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் வைத்து மரியாதை செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளில் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.