1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain chances upcoming two days

2 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்று மற்றும் நாளை நீலகிரி, கோவை, சேலம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் அடுத்த 2 நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, ஆக்ஸ்டு 7 மற்றும் 8 தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தகுதிச் சுற்றில் முதலிடம்: தங்கத்தை குறிவைக்கும் நீரஜ் சோப்ராவின் ஈட்டி