செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (11:57 IST)

ஒலிம்பிக் வாளை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்த வீராங்கனை! – பவானி தேவி நெகிழ்ச்சி!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனை பவானி தேவி தனது வாளை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசளித்துள்ளார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விமரிசையாக நடந்து வரும் நிலையில் இந்தியா சாட்பில் 100க்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஒலிம்பிக்கில் வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி பங்கேற்றார். இரண்டாவது சுற்றுவரை முன்னேறிய அவர் பிரான்ஸ் நாட்டு வீராங்கனையிடம் 7-15 புள்ளிகளில் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் தமிழகம் வந்த அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒலிம்பிக்கிற்கு நான் செல்ல பல உதவிகள் செய்தார். ஒலிம்பிக்கில் நான் பயன்படுத்திய வாளை பரிசாக வழங்கினேன். அவர் இது உங்களுக்கு பெரிதும் தேவைப்படும் என்று மீண்டும் எனக்கே பரிசளித்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.