செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (11:57 IST)

தேவாலய இடத்தில் விநாயகர் சிலை! – இந்து முன்னணியினர் கைது!

திருசெங்கோட்டில் தேவாலய இடத்தில் விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருசெங்கோட்டில் தேவாலயம் ஒன்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்துள்ளது. அந்த தேவாலயத்திற்கு சொந்தமான இடத்தில் சமீபத்தில் இந்து முன்னணியினர் சிலர் விநாயகர் சிலையை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இருதரப்பினரிடையே மோதல் எழுந்த நிலையில் அங்கு விரைந்த போலீஸார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி சிலையை அங்கிருந்து அகற்றியதுடன் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 30 பேரை கைது செய்துள்ளனர்.