திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (11:32 IST)

கொரோனா பேட்ஜில் பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்க தடை? – ஹெச்டிஎஃப்சி வங்கி விளக்கம்!

பிரபல ஹெச்டிஎஃப்சி வங்கி வெளியிட்ட வேலைவாய்ப்பு விளம்பரத்தில் 2021ம் ஆண்டு பாஸ் அவுட் ஆனவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை என்ற அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் தினசரி ஒன்றில் ஹெச்டிஎஃப்சி பேங்க் வேலைவாய்ப்பு விளம்பரம் செய்திருந்தது. அதில் 2021ல் பாஸ் ஆனவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை என வாசகம் இடம் பெற்றுள்ளது.

அவர்கள் கொரோனா காரணமாக வீட்டிலிருந்தே தேர்வெழுதி பாஸ் ஆனதால் வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள எச்டிஎஃப்சி வங்கி இது எழுத்துபிழை எனவும், வயது வரம்பை பூர்த்தி செய்திருந்தால் தேர்ச்சி பெற்ற ஆண்டை பொருட்படுத்தாமல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.