செவ்வாய், 6 டிசம்பர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (13:46 IST)

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து வந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மழை குறைந்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.