1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Mild rain in TN expected for 5 days

5 நாட்களுக்கு மிதமான மழை – எங்கெங்கு தெரியுமா?

தமிழகம்
இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்று வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆம், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 5  நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
About Writer
Sugapriya Prakash