கபாடிப் போட்டியில் தன்னை விட பெரியவரை மடக்கிய சிறுவன்! வைரல் வீடியோ 15:39
கபாடி போட்டியில் ஒரு சிறுவன் ஒருவரை அசால்டாக மடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இளம் கன்று பயமறியாது என்று பழமொழி உள்ளது, இதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் பிரபலமான விளையாட்டு கபாடி, இளைஞர்களின் வீரத்தைப் பறைசாற்ற்கின்ற இந்த கபாடிப் போட்டியில் இரு அணி வீரர்களும் சம அளவில் இருப்பர்.
எண்ணிக்கை குறைய குறைய எதிரணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும், ரெய்ட் வருபவரின் திறனைப் பொருத்து, அவர் அணிக்கு வெற்றி பாய்ண்டுகள் கிடைக்கும்,
இந்த நிலையில் ஒரு பகுதியில் நடந்த கபாடிப் போட்டியில் ஒரு சிறுவனும் ஆர்வமும் கலந்துகொண்டார். எல்லோரையும் விட சிறுவனாக இருந்தாலும் ரெய்ட் வந்த எதிரணி வீரனை தன்னிலும் பெரியவரை அவன் மடக்கிவிட்டான். அவனுக்குப் பாராட்டுகள் குவிந்து, இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.