1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain chances today

9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamilnadu
தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகமான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் ஆகஸ்டு 30 வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய தகவலின் படி இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஈரோடு, தேனி மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தமிழக ரேஷன் கடைகளில் இனி தரமான அரிசி! – அமைச்சர் சக்ரபாணி உறுதி!