வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:05 IST)

எங்க சப்போர்ட் உண்டு! தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுகதான்! – சட்டசபையில் செங்கோட்டையன்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.

தொழிற்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு அதிமுக தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

அதற்கு பின்னர் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் “எங்களைப் பொறுத்தவரை நீட் தேர்வாக இருந்தாலும் சரி, இரு மொழிக் கொள்கையாக இருந்தாலும் சரி, அரசு முன்வைக்கும் நல்ல நடவடிக்கைகளுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும்” என கூறியுள்ளார்.

மேலும் “திராவிட இயக்கம்தான் தமிழ்நாட்டை ஆளும் என்பதற்கு அடித்தளமிட்டவர் பெரியார். திமுகவும் அதிமுகவும்தான் மாறிமாறி ஆட்சிக்கு வரும், திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்தமுடியாது என்பதை மக்கள் நிரூபித்து வருகிறார்கள்.” என்று அவர் கூறியுள்ளார்.