1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain chances in coming hours

கோடையில் இதமளிக்கும் மழை; 7 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!

Tamilnadu
தமிழகத்தில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டலத்தில் உருவாகியுள்ள சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மதுரை, கரூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, மற்றும் கன்னியகுமாரி மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு வானிலை வழக்கத்தை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
யோகியை கேவலமாக பேசிய சித்தார்த்தை கைது செய்ய வேண்டும் – பாஜக புகார்!