திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (15:26 IST)

யோகியை கேவலமாக பேசிய சித்தார்த்தை கைது செய்ய வேண்டும் – பாஜக புகார்!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவமதிக்கும் வகையில் பேசிய நடிகர் சித்தார்த்தை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட நடிகரான சித்தார்த் அவ்வபோது மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை ட்விட்டர் மூலமாக விமர்சித்தும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் உத்தர பிரதேச ஆக்ஸிஜன் தட்டுப்பாடு மற்றும் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி குறித்து நடிகர் சித்தார் காட்டமாக பதிவிட்டிருந்தார்.

அதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளதாகவும், அதனால் நடிகர் சித்தார்த்தை கைது செய்ய வேண்டும் என்றும் பாஜகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதேசமயம் பாஜகவினர் தனது எண்ணுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுப்பதாக சித்தார்த்தும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பை எழுந்துள்ளது.