திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 1 அக்டோபர் 2022 (16:01 IST)

மாணவிகள் முன் பந்தா காட்ட நினைத்து பைக்கில் இருந்து விழுந்த இளைஞர்! வைரல் வீடியோ

byke
தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் சமீப காலமாக மாணவர்கள்ன்மற்றும் இளைஞர்கள் பைக் ஸ்டண்டில் ஈடுபவதாகவும், இரவு நேரத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக  பைக் ரேசில் ஈடுபவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை பலமுறை எச்சரித்துள்ளது. அண்மையில் ஒரு பள்ளி மாணவன் பேருந்தின்  ஜன்னல் பிடித்தபடி, ஸ்கேட்டிங் சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு கல்லூரி பேருந்து நிலையத்தில் மாணவிகள் கூட்டமாக  நின்றிருக்கும்போது, அந்த வழியே வந்த ஒரு பைக்கில் இரு இளைஞர்கள் இருந்தனர். ஒருவர் பைக்கை ஓட்டும்போது, பின்னால்  அமர்ந்திருந்த மற்றொரு இளைஞர், மாணவிகள் முன் சாகசன் செய்து காட்ட, சீட்டில் இருந்து எழுந்து காலைத் தூக்கியபோது, தடுமாறி சாலையில் விழுந்தார்.

இதில், பலத்தை அடிபட்ட அவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Edited by Sinoj