ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (23:17 IST)

வீடு மற்றும் வாகனத்தில் இரண்டு கொடிய விஷமுள்ள பாம்புகள்

கரூர் அருகே அடுத்தடுத்து வீடு மற்றும் வாகனத்தில் இரண்டு கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடித்து மக்களை புகளூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர்.
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகளூர் வட்டம், புகளூர் ரயில்நிலையம் அருகே இருசக்கர வாகனத்தினை பிரேம் குமார் நிறுத்தி வைத்து பின் வண்டியை எடுக்கும் போது கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு இருப்பது கண்டறியப்பட்டு உடனே, புகளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு போன் செய்துள்ளார். தீயணைப்பு நிலைய அதிகாரி திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த வாகனத்தில் இருந்த கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பினை அப்படியே லாவகமாக பிடித்து சாக்கில் கட்டி வனப்பகுதியில் விட்டனர். இதே போல், வேலாயுதம்பாளையம் செக்குமேடு பகுதியினை சார்ந்த சதீஷ்குமார் என்பவரது வீட்டில், புதிதாக வீடு கட்டுமிட்த்தில் சிமெண்ட் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு இருப்பது கண்டறியப்பட்டு, இதனையும் தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து காட்டிற்குள் விட்டனர். கரூர் அருகே அடுத்தடுத்து சுமார் ½ மணி நேரத்தில் இரண்டு இடங்களில் கொடிய விஷமுள்ள இரண்டு பாம்புகள் பிடிபட்ட நிலையில், அதனை பத்திரமாகவும், லாவகமாகவும் பிடித்து காட்டில் பாதுகாப்பாக விட்டனர். பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.