1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu heavy rain alert

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamilnadu
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுபெறுவதால் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது.

இந்நிலையில் வங்க கடலில் வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலு பெறுவதால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
18 வயதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற இளம்புயல் எம்மா ரடுகானு - யார் இவர்?