தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் அவசியமில்லை! – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
சாலை ஓரங்களில் வசிப்பர்வர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆதார அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 40 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது 7 மணியளவில் தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்த வருகை தந்து வருகின்றனர்.
இந்நிலையில் சாலை ஓரங்களில் வசிப்போர், ஆதரவற்றோர் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆதார் இல்லாததை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆதார் இல்லாவிட்டாலும் தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.