மாணவனை மரணக்குழியில் தள்ளிவிட்டீர்கள்! – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
நீட் தேர்வு அச்சம் காரணமாக மேட்டூர் அருகே மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.