வெள்ளி, 7 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (11:13 IST)

எந்த அடக்குமுறையையும் எதிர்த்து கேள்வி கேட்டவர்! – பாரதியார் குறித்து மு.க.ஸ்டாலின்!

இன்று பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ் மகாகவியும், சுதந்திர போராட்ட வீரருமான பாரதியாரின் நினைவு நூற்றாண்டு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இதற்காக நடைபெற்ற பாரதி நினைவுநாள் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரதிச் சுடரை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

பின்னர் பாரதியார் குறித்து பேசிய அவர் “குடும்பமாக இருந்தாலும், அரசாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும் எந்த அடக்குமுறையையும் எதிர்த்து கேள்வி கேட்டவர் பாரதியார்” என தெரிவித்துள்ளார்.