தொடர்புடைய செய்திகள்
- ஷங்கர் மகளுக்கு பிரமாண்ட முறையில் திருமணம் !
- 75% மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும்! – தனியார் கல்லூரிகளுக்கு வார்னிங்!
- இன்றே கடைசி நாள்....இரண்டாம் தவணைத் தொகை, மளிகைப் பொருட்கள் வாங்க....
- பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீட்டு முறை !
- இனி ஆதார் வேண்டாம் !தடுப்பூசி செலுத்த அரசு புதிய முறை !
தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா! – அதிர்ச்சி தகவல்!
கொரோனா இரண்டாம் அலையிலிருந்து தமிழகம் மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய முழுவதும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட இரண்டாம் அலையால் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிய நிலையில் தற்போது 50 ஆயிரமாக குறைந்துள்ளது.
இந்நிலையில் டெல்டா வகை கொரோனாவிலேயே திரிபடைந்த டெல்டா ப்ளஸ் வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் அடுத்த அலை டெல்டா ப்ளஸ் தொற்றால் ஏற்படலாம் என கூறப்படும் நிலையில் இந்தியாவில் மொத்தமாக 48 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
