வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (17:00 IST)

ஷங்கர் மகளுக்கு பிரமாண்ட முறையில் திருமணம் !

இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரது மகளுக்கு விரைவில் பிரமாண்ட செட்டில் திருமணம் நடக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் அர்ஜூன் நடிப்பில் வெளியான ஜென் டல்மேல் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஷங்கர். அதன்பின் காதலன், ஜீன்ஸ், நண்பன், முதல்வர், இந்தியன், சிவாஜி உள்ளிட்ட கமர்ஷியல் படங்களை எடுத்து வெற்றி பெற்றார்.

இந்தியன் 2 பட ஷீட்டிங்கின்போது எதிர்பாரத வகையில் கிரேன் விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு இப்படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவாகவுள்ள படத்தை இவர் இயக்கவுள்ளார்.

மேலும், இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரனி  மகன் ரோஹித்  என்பவருக்கும் விரையில் திருமணம் நடக்கவுள்ளது.  இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தி பிரமாண்டமான செட்டில் நடகவுள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் விளையாடும் மதுரை பேந்தர்ஸின் உரிமையாளர் தாமோதரன் என்பதும் இவரது மகள் ரோஹித் புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் உரிமையாள என்பதும் குறிப்பிடத்தக்கது.