1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. LuLu Hypermarket All Set to Transform Chennai Metro Stations into Vibrant Shopping Hubs

சென்னையின் 2 மெட்ரோ ரயில் நிலையங்களில் வருகிறது லூலு மால்.. விரைவில் திறப்பு விழா...

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்  தனது முதற்கட்ட மெட்ரோ நெட்வொர்க்கில் உள்ள இரு முக்கிய சுரங்கப்பாதை நிலையங்களை மினி ஷாப்பிங் மையங்களாக மாற்றும் அதிரடி முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஷெனாய் நகர் மற்றும் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த லூலூ ஹைப்பர் மார்க்கெட் மற்றும் லூலூ டெய்லி அவுட்லெட்டுகள் விரைவில் திறக்கப்படவுள்ளன.
 
ஷெனாய் நகர் மெட்ரோ நிலையத்தின் அடித்தளத்தில் சுமார் 1.12 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான லூலூ ஹைப்பர் மார்க்கெட் அமையவுள்ளது. இதனுடன் ஃபன் சிட்டி, பிரபல உணவகங்கள் மற்றும் உணவு வளாகம் ஆகியவையும் இடம்பெற உள்ளதால், இந்த பகுதி ஒரு துடிப்பான வணிக மையமாக மாறப்போகிறது. 
 
அதேபோல், அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தின் டிக்கெட் வழங்கும் பகுதியில் பயணிகளின் வசதிக்காக லூலூ டெய்லி அங்காடி வரவுள்ளது. அடுத்த சில மாதங்களில் விம்கோ நகர் மெட்ரோ நிலையத்திலும் மற்றொரு லூலூ டெய்லி திறக்கப்பட உள்ளது.
 
இந்த வணிக வளாகங்கள் மூலம் மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றும், பயணக் கட்டணம் அல்லாத பிற வழிகளில் மெட்ரோ நிறுவனத்திற்கு வருவாய் அதிகரிக்கும் என்றும் CMRL அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினசரி பயணிகளுக்கு இந்த புதிய ஷாப்பிங் அனுபவம் பெரும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
அறிவிப்பு பலகையில் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...