செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (08:33 IST)

அடுத்த வாரம் முதல் கொரோனா மாத்திரை..! – விலை எவ்வளவு?

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவின் மெர்க் நிறுவனத்தின் கொரோனா மாத்திரை அடுத்த வாரம் முதல் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் டெல்டா வைரஸ் பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சைக்காக அமெரிக்காவின் மெர்க் நிறுவனத்தின் மாத்திரைகளை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மாத்திரைகளை ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது.

இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 ஆகும். கொரோனா நோயாளிகளுக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 மாத்திரைகளின் மொத்த விலை ரூ.1,400 ஆக இருக்கும். அடுத்த வாரத்தில் இந்தியா முழுவதும் இந்த மாத்திரையை விநியோகிக்க உள்ளதாக ரெட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.