1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 மே 2020 (10:41 IST)

கோயம்பேட்டை காப்பாத்த முடியாதவங்க டாஸ்மாக்கை திறக்கிறார்கள்! – கமல்ஹாசன் ட்வீட்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த ஒரு மாத காலமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக செயல்படாமல் இருந்த டாஸ்மாக் கடைகளை மே 7 முதல் திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பிற்கு பல அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் இந்த செயல்பாடு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் ” கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.” என விமர்சித்துள்ளார்.