செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 மே 2020 (10:30 IST)

மனசு வந்து டாஸ்மாக்கை திறக்கல! – அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் சூழ்நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ “கள்ள சாரயத்தை ஒழிக்கவும், மக்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுக்கவும் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் முடிவு அரசு மனமுவந்து எடுத்த முடிவல்ல” என்று அவர் கூறியுள்ளார்.