திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (16:46 IST)

சிராஜ் பந்தில் தலையில் அடிவாங்கிய மயங்க் அகர்வால்… இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி!

பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மயங்க் அகவர்வால் சிராஜ் பந்தை எதிர்கொண்ட போது தலையில் பந்து பட்டு காயமடைந்துள்ளார்.

நாளை இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் மிகத்தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று இந்திய தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சிராஜ் பந்தை எதிர்கொண்ட போது பவுன்சர் பந்து தலையில் பட்டுள்ளது.

விதிகளின் படி பந்து ஹெல்மெட்டில் பட்டால் கன்கஸன் சோதனைகள் செய்யவேண்டும் என்பதால் அவருக்கு பரிசோதனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார்.