1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (15:05 IST)

டெல்லியை கலங்கவைத்த தமிழக விவசாயிகள்: பதறவைக்கும் காட்சிகள்

டெல்லியை கலங்கவைத்த தமிழக விவசாயிகள்: பதறவைக்கும் காட்சிகள்
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராட்டம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்திய விவசாய சங்கம் சார்பில் இன்று டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடெங்கிலும் இருந்து 4 லட்சம் விவசாயிகள் பங்குபெற்றுள்ளனர். தமிழகத்தை சார்ந்த பல விவசாயிகளும் இந்த போடாட்டத்திற்காக டெல்லிக்கு சென்றுள்ளனர்.
 
இந்நிலையில் இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக விவசாயிகள் திடீரென நிர்வாணப் போராட்டத்தை நடத்தினர். திடீரென துணிகளை அவிழ்த்து ரோட்டில் படுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அருகிலிருந்த சக விவசாயிகள் கண்கலங்கினர். இந்த போராட்டத்தை பார்த்த மக்களும் கதிகலங்கிப் போனார்கள். எவ்வளவு வலி வேதனை இருந்தால் அவர்கள் இப்படி செய்வாரகள்?
டெல்லியை கலங்கவைத்த தமிழக விவசாயிகள்: பதறவைக்கும் காட்சிகள்
மத்திய அரசு தொடர்ச்சியாக விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும், இதனால் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது எனவும் முழக்கமிட்டபடி போராட்டம் நடத்தினர்.